jaffna lecturer | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.பல்கலை விரிவுரையாளர் படுகொலை ; மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை..!

  • Apr 17, 2026 - 09:44 AM
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]

400 crore boat | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

படகில் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்..!

  • Apr 17, 2026 - 09:39 AM
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த […]

registration department 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று இடைநிறுத்தம்..!

  • Apr 17, 2026 - 09:30 AM
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (17.04.2026) செயற்படாது என டிஜிட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று இயங்காது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

suspicious item | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக பொதிகளுடன் சிக்கிய படகு கரைக்கு..!

  • Apr 17, 2026 - 09:26 AM
  • 0 Comments

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று (16.04.2026) குறித்த நெடுநாள் மீன்பிடி படகு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது. அதனுடன் படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் நீண்டதூர நடவடிக்கைக் கப்பல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் படகும் மீனவர்களும் பொறுப்பேற்கப்பட்டனர். குறித்த […]

thansika incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாடகி தன்சிகாவிற்கு உடுத்துறையில் கெளரவிப்பு..!

  • Apr 16, 2026 - 11:13 AM
  • 0 Comments

கிளிநொச்சியில் இடம் பெற்ற காலக் குரல் பாடல் போட்டியில் முதலாவது இடத்தை பெற்ற யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்த மாணவி ஜெ.தன்சிகாவிற்கான பாராட்டு விழா நேற்று(15.04.2026) உடுத்துறை பாரதி விளையாட்டு கழக பொதுமண்டபத்தில் முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார், கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு முதலாம் இடத்தை […]

chinese arrival sl | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது..!

  • Apr 16, 2026 - 11:04 AM
  • 0 Comments

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16.04.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்னணுத் தொடர்பு சாதனங்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை 12:25 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6912 ரக விமானம் மூலம் […]

thaiyiddy vihara | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கான முதல் படியா..?

  • Apr 16, 2026 - 10:33 AM
  • 0 Comments

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. தையிட்டி காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். காணியினை அளவீடு செய்வதனால் , காணிக்கான வரைபடத்தினை பெற்றுக்கொள்வதனால் , […]

sl weather 18 6 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 16, 2026 - 09:36 AM
  • 0 Comments

16.04.2026 மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேபோல், மேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் […]

economic recovery | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம்..!

  • Apr 16, 2026 - 09:26 AM
  • 0 Comments

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் எனவும் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பினுடைய ஸ்தாபகர் விஜயரத்தினம் தனுஸ் தெரிவித்துள்ளார். இலக்கியா-தென்றல் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜெயச்சித்திரா அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பானது […]

doctor attacked | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நோயாளியால் பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை..!

  • Apr 15, 2026 - 04:35 PM
  • 0 Comments

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவராவார். பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டுள்ளார். அந்த நேரத்தில் வைத்தியர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாகத் எச்சரித்துள்ளார். […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp