e0aeaee0aeb4e0af88 e0aeb5e0af86e0aeb3e0af8de0aeb3 e0aeaae0aebee0aea4e0aebfe0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb3e0af88 e0aeaae0aebe | Pathivu News இந்தியா செய்திகள்

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • Dec 2, 2024 - 09:54 AM
  • 0 Comments

ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் […]

e0aeaae0aebee0aea3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0af82e0ae9f e0aeaae0ae9fe0aeaee0af86e0ae9fe0af81e0aeaae0af8de0aeaae0af80e0aeb0 | Pathivu News உள்ளூர்

பாணுக்கு கூட படமெடுப்பீர்களா?

  • Dec 2, 2024 - 07:41 AM
  • 1 Comment

நாட்டில் சீரற்ற காலநிலையால் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது மக்கள் பல்வேறுவிதமான சிக்கலுக்கு முகம் கொடுத்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள அனர்த்தம் மற்றும் போக்குவரத்து தடை தொற்று நோய்கள் அடிப்படை தேவைகளான உணவு உறையுள் போன்றவற்றிக்கு கஸ்ட்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக இடைத்தங்கல் முகாம்களிலும் வெள்ளம் வீட்டிற்கு சென்ற நிலையிலும் அதே வீட்டிலும் சிலர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவினை சிலர் வழங்கினார்கள். தொண்டு நிறுவனங்கள் […]

e0aeaae0aeafe0ae99e0af8de0ae95e0aeb0e0aeb5e0aebee0aea4 e0aea4e0ae9fe0af88e0ae9ae0af8d e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News உள்ளூர் செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான யாழ் இளைஞன் விளக்கமறியலில்

  • Dec 2, 2024 - 04:05 AM
  • 0 Comments

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் […]

e0aeaae0aebfe0aeb0e0aebfe0ae9fe0af8de0ae9fe0aea9e0af88 e0ae9ae0af87e0aeb0e0af8de0aea8e0af8de0aea4 e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8a | Pathivu News செய்திகள்

பிரிட்டனை சேர்ந்த கிளிநொச்சி தம்பி கொழும்பில் கைது

  • Dec 1, 2024 - 12:15 PM
  • 0 Comments

பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருந்த தமிழர் ஒருவர் கொழும்பு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயண தடையின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின் 2009 இல் நாட்டில் இருந்து வெளியேறி பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த சந்தேக நபர் பிரிட்டனில் நிதி சேகரித்து அவற்றை வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அவர் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது […]

e0aea4e0aea3e0af8de0aea3e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aea4e0ae9fe0af81e0aeaee0aebee0aeb1e0af81e0aeaee0af8d e0aeafe0aebee0aeb4e0af8d | Pathivu News உள்ளூர்

தண்ணியில் தடுமாறும் யாழ்ப்பாணம்

  • Nov 29, 2024 - 10:41 AM
  • 0 Comments

யாழ் மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று அவசர சந்திப்பு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் ; கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத் துய்யகொந்த ‘ அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மருந்துகள் இடையூறு இன்றி சீராக விநியோகிக்க திறைசேரி விசேட ஒதுக்கீடுகளை காலதாமதமின்றி ஒதுக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் இயற்கை […]

e0aeb0e0aeb7e0af8de0aeafe0aebe e0ae87e0aeb0e0aebee0aea3e0af81e0aeb5e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb2e0af81e0ae95e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

ரஷ்யா இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட வடக்கை சேர்ந்த இளைஞர்கள்.

  • Nov 26, 2024 - 01:29 AM
  • 0 Comments

இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குறித்த இளைஞன் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என அவருக்கு வெளிநாட்டு முகவர்களினால் அறிவுறுத்தல் […]

e0ae92e0aeb4e0af81e0ae99e0af8de0ae95e0aeb1e0af8de0aeb1 e0aeaee0aea9e0aebfe0aea4 e0aea8e0ae9fe0aeb5e0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0af88 | Pathivu News உள்ளூர் செய்திகள்

ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகளே இயற்கை பேரழிவுகளுக்குக் காரணம் – ஜனாதிபதி

  • Nov 26, 2024 - 12:28 AM
  • 0 Comments

அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல , தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகளே இயற்கை பேரழிவுகளுக்கு காரணம் நிறுவன மட்டத்தில் விதிமுறைகள் இருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர பதவியேற்பு நிகழ்வில் இன்று இணைந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் […]

e0aeb5e0aebfe0ae9ae0aeb0e0af8d e0ae9fe0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0af8de0aea4e0aeb0e0aebfe0aea9e0af8d e0aeb5e0aebfe0ae9ae0aeb0 | Pathivu News செய்திகள்

விசர் டாக்குத்தரின் விசர் வேலை

  • Nov 25, 2024 - 11:12 AM
  • 0 Comments

சர்ச்சைக்குரிய வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் அவருடன் கதைக்கவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அவருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

e0ae9ae0aeb0e0af8de0ae9ae0af8de0ae9ae0ae9ae0af88e0ae95e0af8de0ae95e0af81e0aeb0e0aebfe0aeaf e0aeb5e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeaf | Pathivu News செய்திகள்

சர்ச்சசைக்குரிய வைத்தியரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ச்சுனா தென்னிலங்கையிலும் பேசுபொருளானார்

  • Nov 24, 2024 - 04:44 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்றதில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டதால் அவருக்கு எதிராக குற்றப் புலனாயவு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது அது தொடர்பில் விசாரணைணகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார். விசர் டாக்குத்தர் என அனபாக அழைக்கப்படும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முகநூலில் பதிவு செய்த கருத்து தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் […]

e0aeb0e0aea3e0aebfe0aeb2e0aebfe0aea9e0af8d e0aeaae0aebee0aea4e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae9ae0af86e0aeafe0af8de0aeaf e0ae85 | Pathivu News செய்திகள்

ரணிலின் பாதையில் செய்ய அநுர சம்மதித்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது

  • Nov 24, 2024 - 01:26 PM
  • 0 Comments

அநுர அரசானது சர்ச்சைக்குரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க சம்மதித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார் கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பெறப்பட்ட நான்கு வருட கடனை தொடர்ந்தும் வழங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லையென பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டினார். புதிதாக […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp