செய்திகள்

பிரிட்டனை சேர்ந்த கிளிநொச்சி தம்பி கொழும்பில் கைது

பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருந்த தமிழர் ஒருவர் கொழும்பு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயண தடையின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின் 2009 இல் நாட்டில் இருந்து வெளியேறி பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த சந்தேக நபர் பிரிட்டனில் நிதி சேகரித்து அவற்றை வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அவர் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது

2009 இல் சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் பயண தடையை பெற்றிருந்தனர் என கைதின் பின்னர் தெரிவிக்கப்படுகின்றது

இந்த நிலையில் இவர் நேற்று (30) பிரிட்டனில் இருந்து கொழும்பு விமானநிலையம் வந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்