முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு பொலிஸ் ஆணைக்குழு நேற்று வகுப்பெடுத்தது

  • Jan 23, 2025 - 09:00 AM
  • 0 Comments

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸாரின் சில இடமாற்றங்களைச் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கம் கொடுத்துள்ளது […]

முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் நிட்சயம் நீக்கப்படும் – பிரதி அமைச்சர் சுனில் வடகல

  • Jan 23, 2025 - 07:04 AM
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியதாக பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார் இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் […]

முக்கிய செய்திகள்

யாழ். மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் தகுதியற்றவர்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Jan 23, 2025 - 06:31 AM
  • 0 Comments

யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபரொருவர் நியமிக்கப்பட்டார். நியமனம் செய்யப்பட்ட குறித்த அதிபர் சேவைக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கின்றார். இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலையீட்டால் அவரின் பதவி தடை செய்யப்பட்டது. தற்போது பதில் அதிபராக இருப்பவர் முற்றிலும் தகுதியற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அரசியல் தலையீடுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார். இப்போது அவர் கல்வி அமைச்சராக இருக்கின்றார். […]

செய்திகள்

பட்டபின்னும் திருந்தாத தமிழரசுக்கட்சி, மீண்டும் தமிழ் தேசியக்கட்சிகளிடையே முறுகல்

  • Jan 23, 2025 - 06:04 AM
  • 0 Comments

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. அதனையடுத்து , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் […]

செய்திகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபரான பெண்ணொருவர் தற்கொலை!

  • Jan 22, 2025 - 08:56 PM
  • 0 Comments

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

செய்திகள்

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றொரு பொலிஸ் உத்தியோகஸத்தர் கைது

  • Jan 22, 2025 - 02:16 PM
  • 0 Comments

கொழும்பில் வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 18 ஆம் திகதி திகதி வெள்ளவத்தையில் உள்ள தனியார் வைத்தியசாலை விடுதிக்கு வெளியே பெண்ணொருவருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார். கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 31,500 ரூபாய் பணம் மற்றும் பிற பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த கடத்தல்காரர்கள் வெலிக்கடைப் பகுதியில் பெண்ணை கைவிட்டு சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் […]

முக்கிய செய்திகள்

மத்திய வங்கி கொள்ளையரான அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர முடியாதென கையை விரித்தார் ஜனாதிபதி

  • Jan 22, 2025 - 01:28 PM
  • 0 Comments

மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மத்திய வங்கி கொள்ளையர்களில் ஒருவரான அர்ஜூன மகேந்திரன் சிங்கபூரில் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றார் அவரை இலங்கைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக ஜனாதிபதி கையை விரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த முயற்சிக்கவுள்ளதாக அவர் மேலும் […]

செய்திகள்

வடக்கில் இலஞ்சம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட 28 பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

  • Jan 22, 2025 - 01:16 PM
  • 0 Comments

வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் லஞ்சம் பெற்றமை மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச் செயல்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடந்த வருடம் மட்டும் வடக்கில் 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 28 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்றமை, மோசடிகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே […]

செய்திகள்

பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை-ஜனாதிபதி

  • Jan 22, 2025 - 09:28 AM
  • 0 Comments

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றுகின்றவர்களின் இடமாற்றங்களை ஒழுங்கு கிரமமாக செய்வதற்கே பொலிஸ் ஆணைக்குழு உள்ளது. ஆனால் பொலிஸ் ஆணைக்குழுவும் இழுத்தடிப்பு செய்கிறது. பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே சில இடமாற்றங்களை கோருகின்றோம் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆனால் ஆணைக்குழு அதனை சரியாக செய்யவில்லையென தெரிவித்துள்ளது இந்த நாட்டை போதைப்பொருள் மற்றும் பாதாளா உலகக்குழுக்களிடமிருந்து கட்டம் கட்டமாக மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளார் ;அதேபோன்று திருடர்களை பிடிக்கவில்லையா என சிலர் எம்மிடம் வினவுகின்றனர்? அவர்களை சிறையில் அடைக்க முடியாத எனக் […]

செய்திகள்

நாடாளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் தரப்படவில்லை. அர்ச்சுனா எம்பி குற்றச்சாட்டு

  • Jan 22, 2025 - 07:56 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை ஆராய்வதற்கு யாரும் நியமிக்கப்படவில்லையென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார் இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் ஒழுங்கு பிரச்சனை ஒன்றை முன்வைத்து கருத்து வெளியிட்டிருந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. கடந்த 8ஆம் திகதி எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளேன். ஆனாலும் இன்று வரை எனக்கு தீர்வு வழங்கப்படவில்லை. இவ்வாறு நீங்கள் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp