முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

  • Jan 24, 2025 - 04:50 PM
  • 0 Comments

மாணவர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள மாணவர்கள் அதனை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடக்கம் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டததை ஆரம்பித்துள்ளனர் 4 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய் விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய் ⁠மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து […]

முக்கிய செய்திகள்

அதானியின் காற்றாலை மின்திட்டம் ரத்து- அமைச்சரவை தீர்மானம்

  • Jan 24, 2025 - 11:13 AM
  • 0 Comments

மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் ஜுன் மாதம் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்து செய்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்துசெய்வதற்கு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்புகள் உருவானதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

கொழும்பில் துப்பாகி சூடு நடத்தி கசிப்பை பிடித்த பொலிஸார்

  • Jan 24, 2025 - 08:44 AM
  • 0 Comments

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது. அதற்கமைய, நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி காரொன்று பயணித்துள்ளது அதனையடுத்து வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் மாளிகாவத்தை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

ஸ்தரமான எதிர்கட்சிக்காக ரணில், சஜித் தரப்புக்களின் இணைவு சாத்தியம்

  • Jan 24, 2025 - 05:28 AM
  • 0 Comments

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையிலான பேச்சுவார்த்தையொன்று அண்மையில் நடைப்பபெற்றுள்ளது. இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களுக்கிடையிலான இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி அது குறித்த பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு கடந்த 20ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது இந்நிலையிலேயே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை […]

முக்கிய செய்திகள்

துப்பாக்கி சூட்டிற்கு நானும் இலக்காக்கப்படலாம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

  • Jan 24, 2025 - 05:16 AM
  • 0 Comments

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை என்ற திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. முன்னாள் ஜனாதிபதி இல்லம் தொடர்பான தீர்மானம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை […]

முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற எம்பிகளுக்கான உணவு விலையை 450 இருந்து 2000 ரூபாவாக உயர்த்த தீர்மானம்

  • Jan 24, 2025 - 04:59 AM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற பராமரிப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின்படி, எம்.பியொருவரின் காலை உணவிற்கு 600 ரூபாவும், மதிய உணவிற்கு 1300 ரூபாவும், மாலை தேநீருக்கு 100 ரூபாவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பராமரிப்புக் குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னய […]

முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பம்!

  • Jan 23, 2025 - 06:57 PM
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டபீடத்தின் ஏற்பாட்டில் வருடம்தோறும் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை (23) காலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஊடக விவரிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் மற்றும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு இனி ஆதரவு கொடுக்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி

  • Jan 23, 2025 - 12:52 PM
  • 0 Comments

இன்றிலிருந்து பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாராளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இன்றிலிருந்து மனதளவில் அரசாங்கத்திற்கு வழங்கிய அனைத்து ஆதரவை மீளப் பெற்றுக்கொள்வதாகவும், உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். இதையும் படியுங்கள்>‘த நெயில்’ சஞ்சிகை யாழ் பல்கலையில் இன்று வெளியீடு! […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு அதிகாரி கைது!

  • Jan 23, 2025 - 11:44 AM
  • 0 Comments

5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்ட நபர், வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சந்தேகநபர் இந்த இலஞ்சத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வடங்கள்!

  • Jan 23, 2025 - 10:49 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய வடங்கள்(வயர்கள்) திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரச சொத்தான ஸ்ரீலங்கா ரெலிகொம் இணைப்பு வயர்கள் அறுக்கப்படுவதனால், அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அரச சொத்துக்கள் நாசமக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp