உள்ளூர் செய்திகள்

இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர்

  • Dec 15, 2024 - 11:30 PM
  • 0 Comments

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்த போது;. இதனைக் குறிப்பிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக இந்த நாட்டு அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்துள்ள பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவேன் எனவும், எதிர்காலத்திலும் அதனைத் தொடரப் போவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு கடந்த தேர்தலில் பெரும் ஆணை வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் காலப்பகுதி சவாலானதாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். […]

செய்திகள்

காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு ;

  • Dec 15, 2024 - 10:59 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினா இங்கு உரையாற்றிய சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ் மாவட்டத்தில் இராணுவ பிடியில் காணி விடுவிப்பதற்கு கால எல்லையை நிர்ணயிக்க முடியுமா? ஒரு கால எல்லையை நிர்ணயித்து செயல்படும்போதுதான் அதற்கான வேலைத்திட்டங்களை செயல்படுத்த முடியும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் காணி விடுவிப்பு வெகு விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் […]

செய்திகள்

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது

  • Dec 15, 2024 - 10:52 PM
  • 0 Comments

வவுனியாவில் ஐயப்ப சாமிகள் சபரிமலை யாத்திரைக்காக அவசரகால கடவுச்சீட்டு மற்றும் வீசா, விமான விமான கட்டணம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கையினை முன்வைத்து மகஜர் ஒன்றினை கையளித்தனர். இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர்களை பொறுத்தவரை பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எனவே இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக மற்ற […]

உள்ளூர் செய்திகள்

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

  • Dec 15, 2024 - 03:29 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் […]

உள்ளூர் செய்திகள்

புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை!

  • Dec 15, 2024 - 03:21 AM
  • 0 Comments

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நாட்டில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் அசோக ரன்வல, சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 6,000 கார்கள் – விசாரணைகள் ஆரம்பம்

  • Dec 15, 2024 - 02:57 AM
  • 0 Comments

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதும் உள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது. அதற்கமைய, விசாரணையின்படி, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பொறுப்பேற்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்க வரி மற்றும் இதர கட்டணங்களை வசூலிப்பதற்காக குறித்த கார்கள் சுங்க திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை சரிபார்க்க சுங்கத் திணைக்களம் […]

செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் கடும் தொனி

  • Dec 14, 2024 - 07:40 PM
  • 0 Comments

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் ஆரும்பமாக இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை […]

உள்ளூர் செய்திகள்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இராமநாதன் அர்ச்சுனாவினால் ஏற்ப்பட்ட அமளி துமளி!

  • Dec 14, 2024 - 03:12 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (13) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அர்ச்சுனா, ஜெயச்சந்திர மூர்த்தி ராஜீவன், கருணைநாதன் இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், அரச திணைக்கள பிரதிநிதிகள், பிரதேச […]

செய்திகள்

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்து வழங்க நடவடிக்கை ரஷ்யா

  • Dec 13, 2024 - 09:29 PM
  • 0 Comments

அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட 55000 மெற்றிக்தொன் உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று கொண்டு வரப்பட்டன. குறித்த உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்தார்.

செய்திகள்

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் குற்றவாளிகளான கபில, உதயங்கவுக்கு எதிராக அநுர அரசு நடவடிக்கை எடுக்குமா? அமெரிக்கா

  • Dec 13, 2024 - 07:56 AM
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடையை அடுத்து உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராக இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகிய இருவருக்கும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (9) மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும் (10) முன்னிட்டு அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்துள்ளது. உலகளாவிய ரீதியில் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp