செய்திகள்

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றமானது இலங்கையை திருப்திபடுத்த இந்தியாவின் கைங்கரியம் -பொ.ஐங்கரநேசன்

  • Jan 21, 2025 - 03:39 PM
  • 0 Comments

யாழ். கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து பொ.ஐங்கரநேசன் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யாழ்ப்பாண கலாசார நிலையம் யாழ். மாநகரசபைக்கு உரித்தான காணியில் இந்திய அரசின் நன்கொடையில் உருவானது. இதற்கான உடன்படிக்கையில் யாழ். கலாசார நிலையத்தை முகாமைத்துவம் செய்கின்ற குழுவில் யாழ் மாநகரசபையினதும் வடமாகாண சபையினதும் சார்பில் ஒவ்வொருவர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சபைகளினதும் கலந்தாலோசிப்புகளின்றி இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது கோத்தபாய அரசாங்கம் யாழ். கலாசார நிலையத்தின் பெயரை மாற்றுமாறு முன்னர் […]

முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 2 பேர் உயிரிழப்பு 15 மாவட்டங்கள் பாதிப்பு

  • Jan 21, 2025 - 07:16 AM
  • 0 Comments

அத்துடன் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த […]

உலகம்

அமெரிக்கவுக்கு இன்று விடுதலை நாள்- புதிய ஜனாதிபதி டிரம்ப்

  • Jan 21, 2025 - 06:42 AM
  • 0 Comments

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதன்பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், ஜனவரி 20-ஆம் தேதி தான் அமெரிக்கவுக்கு விடுதலை நாள். அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பமாகியுள்ளது .உலகம் மதிக்கப்படும் அமெரிக்கா மாறும். இதுவரை இல்லாத அமெரிக்காவைக் கட்டமைப்பேன் என்னுடைய உயிர் ஒரு காரணத்திற்காகவே காக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவதற்காகவே கடவுள் என்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்.’ என்றார். எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது. அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். அமெரிக்காவுக்கே முதலில் முன்னுரிமை என்பதைச் செயல்படுத்துவேன். […]

முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் இன்று கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

  • Jan 21, 2025 - 05:56 AM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐ.தே.க. பேச்சுவர்த்தையில் ஈடுபடவுள்ளது

  • Jan 21, 2025 - 05:34 AM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு பூரண அனுமதியை வழங்கியுள்ளது. கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (20) இடம்பெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் […]

முக்கிய செய்திகள்

கூலி தொழில் சுத்திகரிப்பு தொழில் போன்று வேடமிட்டது தொடர்பில் விளக்கம் கொடுத்துள்ளோம்- வடமாகாண பட்டதாரிகள்

  • Jan 21, 2025 - 05:19 AM
  • 0 Comments

யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகதழிராய்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் […]

முக்கிய செய்திகள்

யாழில் தமிழ்மொழி 3வது இடத்தில் இருப்பதால் அதிர்ச்சியுற்றேன் – அமைச்சர் சந்திரசேகரன்

  • Jan 20, 2025 - 03:51 PM
  • 0 Comments

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் […]

முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கருகில் துப்பாக்கி பிரயோகம்- மூவர் காயம்

  • Jan 20, 2025 - 03:39 PM
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் இன்று (20) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன விமான நிலையத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளினால் ஏற்படும் ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலைய முனையத்திற்கு அருகில் கூட்டம் கூட்டமாகப் பறந்து திரிந்த பறவை கூட்டத்தை விரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாகக் குறித்த துப்பாக்கிச் சூடு விமான நிலைய விலங்குகள் மற்றும் பறவைகளின் ஆபத்துக் […]

முக்கிய செய்திகள்

யாழில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

  • Jan 20, 2025 - 03:26 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் […]

செய்திகள்

தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

  • Jan 20, 2025 - 02:50 PM
  • 0 Comments

தொடரூந்து சாரதிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தர பதவி உயர்வு பரீட்சை காரணமாக மூன்று நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமை போன்று இயங்கும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் பரீட்சைக்கு தயார்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வரை பல தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. எவ்வாறாயினும், நேற்றைய தினம் பிற்பகல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவில்லை என தொடரூந்து திணைக்களம் மேலும் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp