ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், சில இடங்களில் 50 மி.மீ. க்கு மேல் கணிசமான கனமழையும் பதிவாகும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று காலை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
What’s your Reaction?

