உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலாலி வீதி அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்..!

palaly road to remain open from 5 am to midnight | Pathivu News

யாழ்ப்பாணம் பலாலி வீதி நள்ளிரவு 12 மணி வரையில் திறந்திருக்கும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்

வசாவிளான் சந்தியில் இருந்து , பருத்தித்துறை – பொன்னாலை வீதி சந்தி வரையிலான பலாலி வீதியின் சுமார் 2 கிலோ மீற்றர் தூர வீதி , இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கின்றது.

குறித்த வீதி கடந்த 2 வருடங்களுக்கு முன் நேர கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்ட நிலையில் , இதுவரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பொதுமக்களின் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல், காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் பாதை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயம் ஊடாக செல்லும் குறித்த வீதியின் 2 கிலோ மீற்றர் தூர வீதியில் நடந்து செல்வதற்கோ , துவிச்சக்கர வண்டியில் செல்வதற்கோ அனுமதி இல்லை என்பதுடன் , வீதியில் வாகனங்களை தரித்து நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை குறித்த வீதி உள்ளிட்ட பலாலி கிழக்கு பகுதியினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து , தம்மை தமது காணிகளில் குடியேற்றுமாறு , பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி மற்றும் வசாவிளான் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊