வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள தனுஜா முருகேசனின் சேவை நயப்பு விழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த 27.05.2025 முதல் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக பணியாற்றிய அவரது பணிக்காலப் பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டு, அவரது சேவைக்கு நன்றியும் கௌரவமும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம், செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் பல்வேறு பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு ஓய்வுபெற்ற பிரதம செயலாளருக்குத் தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.




