காரைநகர் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் ஆளுநர் சாதகமான பதில் – அதிகாரிகளுக்கு உடனடி பணிப்புரை
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் இன்று (23.11.2026) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களைச் சந்தித்து, காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது, காரைநகர் மக்களின் நீண்டகாலத் தேவைகள் மற்றும் தீர்க்கப்படாமல் உள்ள முக்கியமான ஐந்து கோரிக்கைகள் ஆளுநர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டன.
காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்களின் அன்றாட வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைகள் தொடர்பில் கௌரவ ஆளுநர் அவர்கள் சாதகமான பதிலளித்ததுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகப் பணிப்புரை வழங்கினார்.
மேலும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் உறுதியளித்தார்.
காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்தியை விரைவுபடுத்தி, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வரும் தவிசாளர் அவர்கள், இச்சந்திப்பு காரைநகர் மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
What’s your Reaction?

