உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கின் தொழிலாளர் திறன் தொடர்பான துல்லியமான தரவுகளைத் திரட்டுமாறு ஆளுநர் பணிப்பு..!

governor calls for accurate data collection on the northern provinces workforce | Pathivu News
வடக்கில் உள்ள திறன்சார் மற்றும் திறனற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களது திறன்கள், பயிற்சிகள் மற்றும் தொழில் அனுபவங்கள் தொடர்பான துல்லியமான தரவுகள் அவசியம் எனவும் அதனை சேகரிக்க கூடிய பொறிமுறைகளை உருவாக்குமாறு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய தொழிலாளர் தேவை மற்றும் தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
வடக்கு மாகாணத்தை நோக்கிப் பல்வேறு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். மாகாணத்தில் மூன்று முதலீட்டு வலயங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் எழுப்பும் முக்கியமான கேள்வி, அவர்களது தொழிற்துறைத் தேவைகளுக்குப் பொருத்தமான மனிதவளம் வடக்கு மாகாணத்தில் உள்ளதா என்பதாகும்
இதற்குப் பதிலளிக்கக்கூடிய வகையில், மாகாணத்தில் உள்ள திறன்சார் மற்றும் திறனற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களது திறன்கள், பயிற்சிகள் மற்றும் தொழில் அனுபவங்கள் தொடர்பான துல்லியமான தரவுகள் அவசியம். அதேபோன்று, எந்தெந்தத் தொழில்களுக்கு வேலைவாய்ப்புக் கேள்வி அதிகமாக உள்ளது, தொழில் வழங்குநர்களுக்கு எத்தகைய திறன்கள் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய தகவல்களைத் திரட்டுவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்
மனிதவள மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் தனித்தனியாகப் பணியாற்றினாலும், அவற்றுக்கிடையில் போதிய ஒருங்கிணைவு காணப்படுவதில்லை
ஏற்கனவே உள்ள பதிவுகளையும் தகவல்களையும் ஒருங்கிணைத்து, தேவையான இடங்களில் மேலதிகத் தரவுகளைச் சேகரிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.
Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊