இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம் நேற்றைய தினம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது பொதுச் சுடரினை லெப்டினன்ட் கேணல் அருணா, கப்டன் லீமா, லெப்டினன்ட் சக்தி ஆகிய மூவரின் தந்தையான இராசேந்திரம் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம், பொதுச் செயலாளர் சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும், நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே சிவஞானத்தினால் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/2206729060272145
What’s your Reaction?

