புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் சி – 4 வெடிமருந்துடன் இளைஞன் கைது..!

  • Feb 26, 2026 - 10:20 AM
  • 0 Comments

பொலிஸார் தீவிர விசாரணையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளப்பாடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் கள்ளப்பாடு தெற்கு பகுதியை சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 2 கிலோ 700 கிராம் அளவுடைய C4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

  • Feb 26, 2026 - 10:09 AM
  • 0 Comments

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக 31 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், சுமார் 89 இலட்சத்து 375 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட நிதியானது இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஸ்தலத்தில் உயிரிழப்பு..!

  • Feb 26, 2026 - 10:07 AM
  • 0 Comments

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை மோதி தள்ளியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தின்போது விசுவமடு புளியடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 53 வயதுடைய […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

படுதோல்விக்குக் காரணம் இதுதான்..? உண்மையை அம்பலப்படுத்திய தசுன்

  • Feb 26, 2026 - 10:04 AM
  • 0 Comments

தமது அணியைச் சுற்றி அதிகளவான வெளிப்புற எதிர்மறை விமர்சனங்கள் இருந்ததாகவும், ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு அதீத சாதகமாக இருந்ததாகவும், முக்கிய வீரர்களின் உடற்தகுதிப் பிரச்சினைகளுமே இலங்கையின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள் என அணித்தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். புதன்கிழமை பார்வையாளர்களால் நிரம்பியிருந்த கெத்தாராம மைதானத்தில் 61 ஓட்டங்களால் படுதோல்வியடைந்த இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிய முதல் அணியாக மாறியது. கடந்த ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பெருமளவு மோசமான முடிவுகளைச் சந்தித்திருந்த இலங்கை அணி, […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பணிப்பகிஷ்கரிப்பில் குதிக்கும் மின்சார மற்றும் சுங்கத் தொழிற்சங்கங்கள்..!

  • Feb 26, 2026 - 09:49 AM
  • 0 Comments

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26.02.2026) 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்திய போதிலும், இதுவரை அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என அந்த தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார். […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும்..!

  • Feb 26, 2026 - 09:39 AM
  • 0 Comments

சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கென வெகுவிரைவில் பொதுக் கூட்டமொன்றையும் நடாத்தி, பெற்றார் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான மகஜரை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் ஆகியோரிடம் நேற்று நேரில் சென்று கையளித்தனர். காரைதீவு ஆலய அறங்காவலர் ஒன்றியம், இந்து சமய விருத்தி சங்கம், […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பு மாவட்ட காணி மதிப்பில் தொடரும் ஏற்றம்..!

  • Feb 26, 2026 - 09:34 AM
  • 0 Comments

கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது அதிகரிப்புப் போக்கைத் தொடர்ச்சியாகப் பேணியவாறு, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியானது, காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் உப சுட்டெண்களான வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் ஆகிய மூன்று உப சுட்டெண்களிலும் பிரதிபலித்துள்ளதுடன், அவை முறையே 12.4%, 11.3% மற்றும் 8.0% வருடாந்த அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவான […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு..!

  • Feb 26, 2026 - 09:31 AM
  • 0 Comments

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (26.02.2026) நிறைவடையவுள்ளது. கடந்த காலங்களிலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், பரீட்சை முடிந்த பின்னர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் போக்கு காணப்பட்டதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பெற்றோர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானம் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Feb 26, 2026 - 09:28 AM
  • 0 Comments

26.02.2026 தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய நாளுக்கான பொதுவான வானிலை அறிக்கையை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி, மாத்தறை, மொனராகலை, […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாதாள உலககுழுவினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்திய அமைச்சர்..!

  • Feb 25, 2026 - 12:58 PM
  • 0 Comments

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்தக் குற்றச் செயல்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலேயே வளர்ச்சியடைந்துள்ளன. அரசியல் ஆதரவுடனேயே பாதாள உலகச் செயற்பாடுகளும் போதைப்பொருள் கடத்தலும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp