புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் சி – 4 வெடிமருந்துடன் இளைஞன் கைது..!

பொலிஸார் தீவிர விசாரணையில்

முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளப்பாடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் கள்ளப்பாடு தெற்கு பகுதியை சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து சுமார் 2 கிலோ 700 கிராம் அளவுடைய C4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்