உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி..! பொலிசில் முறைப்பாடு.

  • Mar 6, 2026 - 09:26 AM
  • 0 Comments

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதிகள் ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த வைத்திய தம்பதிகள் தனது அக்காவை வெளிநாடு அனுப்புவதாக கூறி இரண்டு வருடங்களாக கம்போடியா நாட்டில் தடுத்து வைத்துள்ளதாகவும். அக்காவை போன்று மேலும் பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடவசதி உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்காத […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள்..!

  • Mar 6, 2026 - 09:25 AM
  • 0 Comments

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (05.03.2026) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சம்பந்தப்பட்ட கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறித்த கப்பலில் மொத்தம் 208 பணியாளர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Mar 6, 2026 - 09:23 AM
  • 0 Comments

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று (06.03.2026) மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான காலநிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் […]

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்- அமரர் சங்கரப்பிள்ளை தம்பு

  • Mar 6, 2026 - 01:37 AM
  • 0 Comments

கச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் பூநகரி தம்பிராயில் வசித்தவரும் கிளிநொச்சி உதயநகர் மேற்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தம்பு அவர்கள் 05.03.2026 அன்று காலமானார். அன்னார் சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும் நாகலிங்கம் பாக்கியம் தம்பதியினரின் மருமகனும் சீதாலட்சுமியின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற நல்லம்மா ,முத்துபிள்ளை ,வள்ளிப்பிள்ளை ,சிவபாக்கியம் ,சரஸ்வதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரனும் ,சங்கரலிங்கம் (அமெரிக்கா) ,கவிதா ,அமுதா(ஆசிரியர் பரந்தன் இந்து மகா வித்தியாலயம்) சிவா( JCB, LAKSHMI CONTRACTION உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் செல்வருபன்,ரவீந்திரன்,ஜெகஜனனி ஆகியோரின் […]

முக்கிய செய்திகள் புதியவை வணிகம்

தேசிய ஏற்றுமதிப்பாதை வரைபடம் தனியார் துறைக்கு சமர்ப்பிப்பு..!

  • Mar 5, 2026 - 01:00 PM
  • 0 Comments

இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் எதிர்கால போக்கை தீர்மானிக்கும் “தேசிய ஏற்றுமதிப் பாதை வரைபடம்: நிறைவேற்று அதிகாரிகள் மன்றம் (“National Export Roadmap: The CEO Forum)” என்ற மூலோபாய அலகு நேற்று (04.03.2026) ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துந்நெத்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாட்டின் தனியார் துறையின் முன்னணித் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் 2025 […]

உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானிய கப்பல் விவகாரம் அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்..!

  • Mar 5, 2026 - 12:19 PM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (05.03.2026) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய சஜித் பிரேமதாச, நேற்றைய தினம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து டொர்பிடோ மூலம் குறித்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலும் அரசாங்கம் விசேட அறிக்கையொன்றை விடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஈரானிய கப்பலில் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு..!

  • Mar 5, 2026 - 12:01 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04.03.2026) மாலை இடம் பெற்றது. கிராத் ஓதலுடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் இப் புனித ரமழான் மாதத்தில் அன்பையும் பாசத்தையும் சகோதரத்துவத்தினையும் மேலும் வலுச்சேர்க்கும் முகமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் போது கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் […]

உலகம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஈரான் தூதரகத்திற்குச் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க..!

  • Mar 5, 2026 - 11:54 AM
  • 0 Comments

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05.03.2026) காலை ஈரான் தூதரகத்திற்குச் சென்றிருந்தார். ஈரான் தலைவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காகக் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில் தற்போது விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் தனது அனுதாபச் செய்தியைப் பதிவு செய்துள்ளார். அதன்பின்னர், தூதரக அதிகாரிகளைச் சந்தித்த அவர், தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல்..!

  • Mar 5, 2026 - 11:05 AM
  • 0 Comments

குவைத் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றில் பலத்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் ஏற்பட்ட பலத்த வெடிப்பினைத் தொடர்ந்து, அதன் ஒரு சேமிப்புத் தொட்டியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், வெடிப்பைத் தொடர்ந்து கப்பலுக்குள் நீர் புகுந்துள்ள போதிலும், தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கப்பலில் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியாக முக்கிய தகவல்..!

  • Mar 5, 2026 - 11:03 AM
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று, எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா துறைமுகத்திலிருந்து நேற்று […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp