உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு..!

e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0af81 e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae9ae0af86e0aeaf | Pathivu News

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04.03.2026) மாலை இடம் பெற்றது.

கிராத் ஓதலுடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் இப் புனித ரமழான் மாதத்தில் அன்பையும் பாசத்தையும் சகோதரத்துவத்தினையும் மேலும் வலுச்சேர்க்கும் முகமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதன் போது கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.ரிஸ்வி அவர்களினால் புனித ரமழான் விசேட உரையின் போது நோம்பின் மகத்துவம் தொடர்பான கருத்துக்களை தெளிவூட்டினார்.

குறித்த நிகழ்வில் மெளலவி ருசைதுர் ரகுமான், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர், தேசிய உரச் செயலக பிரதி பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதின், அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எ.எஸ்.எம். சியாத், மாவட்ட தகவல் தொடர்பாடல் பிரிவின் உதவி பணிப்பாளர் சின்தா முபாஸ், ஓய்வு பெற்ற பிரதம கணக்காளர் எம்.எஸ்.பசீர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், அங்கர் முகவர் ருசைனி பாயிஸ் மற்றும் வர்த்தக பிரமுகர்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளத்தில் ஆன்மிக உணர்வை நிலைநிறுத்தி பாவமீட்சிக்கான மகத்தான காலமாக நோன்பு காணப்படுவதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந் நிகழ்விற்கான அனுசரனையை போன்டரோ பிரான்ட் லங்கா பிறைவற் லிமிட்டற் வழங்கினர்.

இந் நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp