உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி..! பொலிசில் முறைப்பாடு.

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதிகள் ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த வைத்திய தம்பதிகள் தனது அக்காவை வெளிநாடு அனுப்புவதாக கூறி இரண்டு வருடங்களாக கம்போடியா நாட்டில் தடுத்து வைத்துள்ளதாகவும்.

அக்காவை போன்று மேலும் பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடவசதி உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்காத காரணத்தினால் பலர் அடிமைகளாக அங்கு வேலை செய்வதாகவும் தெரிவித்தார்.

குறித்த வைத்திய தம்பதியினர் நீர் கொழும்பில் வசிக்கும் இன்னுமொரு தரப்பினர் ஊடாக ஆட்களை திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக மோசடியி ஈடுபட்டு வருகின்றனர்.

தனது அக்காவை போன்று மேலும் பலர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வைத்திய தம்பதியினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை கோரிக்கை முன் வைத்துள்ளார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை