முக்கிய செய்திகள் புதியவை

குமார் சங்கக்கார பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..!

  • Mar 11, 2026 - 10:38 AM
  • 0 Comments

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட முதலீட்டு மோசடிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள அவர், தனது பழைய நேர்காணல்களைக் கொண்டு, AI தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட (Doctored Videos) காணொளிகள் முதலீட்டுத் தளங்களை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். “எனது பெயரும் உருவமும் போலியான AI காணொளிகளில் பயன்படுத்தப்படுகின்றன, […]

முக்கிய செய்திகள் புதியவை

மின்சார ஊழியர்களை உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு..!

  • Mar 11, 2026 - 09:21 AM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (EDL) மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் (NTNSP) ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவம் அனைத்து ஊழியர்களுக்கும் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைப் பகிர்வுத் திட்டத்தின்படி, அனைத்து மின்சார சபை ஊழியர்களும் உரிய […]

முக்கிய செய்திகள் புதியவை

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 11, 2026 - 09:20 AM
  • 0 Comments

இன்றைய தினம் (11.03.2026) நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அடிதடியில் அர்ச்சகர்கள் பறிபோன உயிர்..!

  • Mar 10, 2026 - 11:24 AM
  • 0 Comments

யாழ் நயினாதீவு பகுதியில் இரு குருக்கள்மாரிடையேயான மோதலில் வாளால் வெட்டிக் கிருஷ்ணகுமார் ஐயா கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தொழில் நிமிர்த்தம் யாழ் நயினாதீவுக்கு சென்று தங்கியிருந்த வேளை யாழ் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய குருக்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அர்ச்சகர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மற்றொரு நபர் கத்தியால் குத்தி இவரைக் கொலை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் […]

முக்கிய செய்திகள் புதியவை

இன்று முதல் உயர்வடடைகிறது பாடசாலை போக்குவரத்து கட்டணம்..!

  • Mar 10, 2026 - 11:12 AM
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10.03.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பலமுறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும், நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார். இருப்பினும், இம்முறை […]

முக்கிய செய்திகள் நினைவஞ்சலி புதியவை

பாஷாண உத்வாசன சபிண்டீகரண அழைப்பிதழ்..!

  • Mar 10, 2026 - 10:35 AM
  • 0 Comments

கொத்துக்குளத்தவளே துணை அன்புடையீர் நிகழும் விசுவாவசு வருடம் மாசி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் 28.2.2026 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர்.விசுவநாதர்யோகலிங்கம்( ஜோதிடர்ரமணிஐயா பிரணவம் நூலாசிரியர்) அவர்களின் பாஷாண உத்வாசனம் 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00மணிக்கு இடம்பெற்று தொடர்ந்து மு.ப 10.00மணிக்கு சபிண்டீகரணகிரியைகள் இடம்பெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று வருகை […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் பள்ளிவாசலில் தொழுகையின் போது நடந்த சம்பவம்..!

  • Mar 10, 2026 - 09:58 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் நேற்றிரவு(09.03.2026) ஒன்றில் தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றையதினம் தொழுகை இடம்பெற்றது. இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலால் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

அணிசேரா நாடுகளுக்கு தலைமையேற்ற நாடு மத்தியகிழக்குப் போரில்எந்தப் பக்கம் நிற்கிறது..?

  • Mar 10, 2026 - 09:55 AM
  • 0 Comments

ஒரு வாரமாக சுரேஸ் சாலேயுக்காக குரல் கொடுத்த பருவகால பட்சிகள் இப்போது மத்தியகிழக்குப் போரின் பக்கம் பறந்துவிட்டன. ஈரானின் போர்க்கப்பலை இலங்கைக் கடல் எல்லையில் அமெரிக்கா தாக்கியதை அநுர அரசு எவ்வாறு பார்க்கிறது? அரசியல்வாதிகளை பருவகால பட்சிகள் என்று பொதுவாகக் கூறுவார்கள். அவ்வப்போது எது எது கண்ணில் முக்கியமாகப்படுகிறதோ அதனை முன்னிலைப்படுத்தி செயற்படுவதை இது குறிக்கும். இதில் இலங்கை அரசியல்வாதிகள் இனமத பேதமின்றி ஒருமுகப்பட்டவர்கள். அவ்வப்போது திடீரென வாகனங்கள் சுழன்று திரும்புவதுபோல இவர்களுடைய செயற்பாடுகள் அமைந்திருக்கும். கடந்த […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் போதைப்பொருள் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது..!

  • Mar 10, 2026 - 09:47 AM
  • 0 Comments

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனையில் ஆண் , பெண் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரின் உடைமையில் இருந்து போதைப்பொருட்களை மீட்ட நிலையில், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , கொழும்பில் உள்ள […]

முக்கிய செய்திகள் புதியவை

23 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பலிகடாக்கியுள்ள அரசு..!

  • Mar 10, 2026 - 09:45 AM
  • 0 Comments

தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசின் தற்போதைய நகர்வுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலுக்கு முன்பு மின்சார சபையின் 23 ஆயிரம் தொழிலாளர்களை வீதியில் இறக்கி, எக்காரணம் கொண்டும் மின்சார சபையைத் தனியார்மயமாக்க விடமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுதியளித்தது. ஆனால், இன்று அதிகாரத்தைப் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp