உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் பள்ளிவாசலில் தொழுகையின் போது நடந்த சம்பவம்..!

யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் நேற்றிரவு(09.03.2026) ஒன்றில் தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றையதினம் தொழுகை இடம்பெற்றது.

இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலால் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை