உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னாரில் பட்டப்பகலில் முகமூடியுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் தங்கச்சங்கிலியுடன் தப்பியோட்டம்

  • Jul 24, 2025 - 05:49 PM
  • 0 Comments

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் வீதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் முகமூடியுடன் ஒருவர் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த வேளை, வீட்டின் பின்புற வேலியின் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது. திருடன், ஆசிரியையின் கைகளில் அணிந்திருந்த வளையல்களையும் பறிக்க முயன்றுள்ள […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலுக்கு பரப்புவதற்கு மணல் இல்லை.

  • Jul 24, 2025 - 05:14 PM
  • 0 Comments

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சரித்திரப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, அடியவர்களின் நலனுக்காக வீதிகளில் மணல் பரப்புவது வழமையாகும் என கூறியுள்ளார். ஆனால், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாங்குளத்தில் 2 பிள்ளைகளும் தாயும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

  • Jul 24, 2025 - 05:02 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் உள்ள அரசு வீட்டு திட்டத்திலுள்ள கிணற்றிலிருந்து தாய் மற்றும் இரு பிள்ளைகளின் சடலங்கள் இன்று (24) வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் 38 வயதான தாயும், 11 வயதான மகனும், 4 வயதான மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பனிக்கன்குளம் கிராமத்தில் வசித்து வந்த இந்த குடும்பத்தினர், தங்களது வீட்டு வளாகத்திற்கு சுமார் 500 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த அரசு வீட்டு திட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக் கிணற்றிலிருந்து […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் விமான விபத்து 49 பேர் பலி

  • Jul 24, 2025 - 03:40 PM
  • 0 Comments

ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன விமானம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. டின்டா விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து திடீரென மாயமானது. அந்த விமானத்தின் எரிந்த உடற்பகுதியை ரஷ்யாவின் அவசரகால அமைச்சகத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்புரை

  • Jul 24, 2025 - 03:27 PM
  • 0 Comments

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் என்றும், அவை யாருடைய அழுத்தத்துக்காகவும் நிறுத்தப்படக்கூடாது என்றும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். நேற்று (22-07) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சில உள்ளூராட்சி மன்றங்களில் முன்னேற்றம் காணப்படுவதைக் குறிப்பிட்ட ஆளுநர், மக்களுக்கான சேவையில் விரைவாகச் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி போன்ற சேவைகளை விரைவாக வழங்குமாறும் கூறினார். […]

உள்ளூர் செய்திகள்

ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு புதிய ஆதாரங்கள் உள்ளதாக கனடா எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

  • Jul 24, 2025 - 02:01 PM
  • 0 Comments

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 1983ஆம் ஆண்டின் ‘கறுப்பு ஜூலை’ வலிகளை மீண்டும் நினைவூட்டுவதாகக் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியர் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், தமிழ் பாரம்பரியத்துடன் கூடிய கனேடியர்கள் இந்த நிகழ்வை நினைவுகூரும் வேளையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் ஈவிரக்கமற்ற வரலாறு மீண்டும் எதிரொலிக்கின்றது என அவர் கூறினார். செம்மணி பகுதியில் நடக்கும் அகழ்வுப் பணிகளில் […]

உள்ளூர் செய்திகள்

பிரான்சில் அன்டன் பாலசிங்கத்தின் சிலை நிறுவுவமை அரசாங்கம் தடுக்கவேண்டுமென்கிறார் முன்னாள் இராணுவ அதிகாரி ஜகத்டயஸ்

  • Jul 24, 2025 - 01:51 PM
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை பிரான்ஸ் தலைநகரில் நிறுவுவதற்கான முயற்சிகள் குறித்து இலங்கை அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென முன்னாள் இராணுவ அதிகாரி லெப். ஜெனரல் ஜகத்டயஸ் வலியுறுத்தினார். புலம்பெயர் தமிழர்களை திருப்தி செய்யும் நோக்கத்திலான பிரான்சின் செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட செயற்பாடுகளிலிருந்து பாலசிங்கத்தை தனியாகப் பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார். இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கனடா பயணத் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரிக்கை

  • Jul 24, 2025 - 01:39 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழி தமிழர்களின் கருவைக்கூட அறுக்கும் அளவிலான பயங்கரமான செயலை எடுத்துக்காட்டுகிறது என்பதைக் கவனித்தல் அவசியம் எனத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், குழந்தைகள், சிறார்கள், முதியவர்கள் என பலரும் புதைக்கப்பட்டுள்ளமை, குறிப்பாக தாயின் கருவிலேயே கருவைக்கூட அழித்தமை, தமிழின அழிப்புக்கான உயிர் சாட்சியாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில், உள்ளக விசாரணைகள் தோல்வியடைந்துள்ளன என்பதையும், அதனூடாக வெளியான தகவல்கள் போலியானவையாக இருந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி நாட்டின் 3வது பெரிய மனித புதைகுழியாக அடையாளம்

  • Jul 24, 2025 - 01:32 PM
  • 0 Comments

வடக்கு மாகாணம் செம்மணி பகுதியில் 2025 மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை 85 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் நான்கு அல்லது ஐந்து வயதுடைய பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்குகின்றன. இது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளம் பெறுகிறது. முன்னதாக மூன்றாவது பெரிய புதைகுழியாக இருந்தது மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2023ல் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி. அங்கு 82 எலும்புக்கூடுகள் அகழப்பட்டது. செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் 18 நாட்கள் நீடித்த […]

உள்ளூர் செய்திகள்

காதலியை கழுத்தறுத்து கொன்று விட்டு காதலன் தற்கொலை

  • Jul 23, 2025 - 05:32 PM
  • 0 Comments

இளம் பெண்ணை கொன்று அவரது பெற்றோரை வெட்டி காயப்படுத்திய இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரங்கல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அவரது காதலன் என கூறப்படும் இளைஞனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் தனது காதலி எனப்படும் இளம் பெண்ணொருவரின் வீட்டிற்கு பிரவேசித்த […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp