செய்திகள் விளையாட்டு

ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கிரிகெட் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது

  • Jul 25, 2025 - 06:01 PM
  • 0 Comments

ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியுள்ளது ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்.பியை சபையில் கடுமையாக சாடிய அமைச்சர் பிமல்

  • Jul 25, 2025 - 05:05 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியிடும் கீழ்த்தரமான நோக்கத்தில் கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க விமர்சித்துள்ளார். மேலும் அவர், ‘நான் வினயமாக கேட்டுக் கொள்கிறேன், இனவாத அரசியல் செய்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை நாடாளுமன்றில் பறைசாற்ற வேண்டாம். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்’ என்றார். அதேவேளை, மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி தொடர்பில் சாணக்கியன் கேட்டிருந்த கேள்விக்கு 06 மாதங்களின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரொருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்

  • Jul 25, 2025 - 04:51 PM
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் நிலைய விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் இவர், குடும்பப் பிரச்சனையை ஒட்டிய விசாரணைகளுக்காக இன்று பொலிஸாரால் அழைத்து வரப்பட்டிருந்தார். விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில், தான் அணிந்திருந்த சட்டையின் ஒரு பகுதியை கிழித்து, விசாரணை கூண்டிற்குள் இன்று மதியம் 12.08 மணியளவில் தூக்குபோட்டு உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி தொடருந்து நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெண் மீது விபத்தையேற்படுத்தி துண்டாடிய காலை மோட்டார் சைக்கிளில் எடுத்துசென்ற மாணவன் கைது

  • Jul 25, 2025 - 04:39 PM
  • 0 Comments

அக்மீமன ஹினிதும்கொட கனிஷ்ட பாடசாலைக்கு அருகில் நேற்று (24-07) வியாழக்கிழமை நடந்த சோகச்சம்பவத்தில், தனது பிள்ளைகளுடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் வந்த மாணவனொருவர் மோதியதாக தெரியவந்துள்ளது. விபத்தின் தாக்கத்தில் பெண்ணின் ஒரு கால் பகுதி துண்டிக்கப்பட்டு, அந்த பகுதி மோட்டார் சைக்கிளில் சிக்கியுள்ளது. இந்த நிலையிலும் மாணவன் தப்பிச் செல்ல முற்பட்டு, சைக்கிளில் சிக்கியிருந்த காலை அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளான். இந்த சம்பவத்தின் போது காயமடைந்த பெண், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரும் வடகிழக்கு போராட்டத்திற்கு கொழும்பிலும் ஆதரவு

  • Jul 25, 2025 - 04:22 PM
  • 0 Comments

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் பாஸ்போர்ட் சர்வதேச தரவரிசையில் முன்னேற்றமடைந்துள்ளது

  • Jul 25, 2025 - 01:56 PM
  • 0 Comments

இலங்கை, சமீபத்தில் வெளியான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு- iனெநமள (ர்நடெநல Pயளளிழசவ ஐனெநஒ) தரவரிசையில் ஐந்து நிலைகளை முன்னேறி, 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 96வது இடத்திலிருந்து 91வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இலங்கை பெற்றிருந்த நான்கு நிலை முன்னேற்றத்தைத் தொடர்ந்து தொடரும் வளர்ச்சியாகும். ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசை, 199 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு, அந்தந்த நாட்டின் குடியுரிமையாளர்கள் முன்வீசா தேவையின்றி செல்ல முடியும் இடங்களின் எண்ணிக்கையை வைத்து தரப்படுத்துகிறது. தற்போதைய நிலவரப்படி, இலங்கைப் […]

உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்ஸ் பலஸ்தீனை ஒரு நாடாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது

  • Jul 25, 2025 - 01:25 PM
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும், நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தின் போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள மக்ரோன், ‘காசா பகுதியில் போரை நிறுத்தி பொதுமக்களை காக்கும் நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும். உடனடியாக சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும். எல்லா […]

உள்ளூர் செய்திகள்

சிறீதரன் எம்பி. சொத்து குவித்திருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

  • Jul 25, 2025 - 01:04 PM
  • 0 Comments

யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அத்துடன், எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

உள்ளூர் செய்திகள்

X-Press Pearl வழக்கில் சட்டமா அதிபரின் முடிவை விசாரணைக்குட்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • Jul 25, 2025 - 12:33 PM
  • 0 Comments

X-Press Pearl கப்பல் தொடர்பான வழக்கில், இலங்கை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில், சட்டமா அதிபரின் தீர்மானம் அநியாயமானது, நியாயமற்றது மற்றும் சீரற்றது எனக் குற்றம்சாட்டி, குற்றப்புலனாய்வுத் துறையிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. சிங்கப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நிவாரண வழக்கு தொடர்ந்த சட்டமா அதிபர், அதே நேரத்தில் இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் கடல் அதிகாரத்தின் கீழ் வழக்குத் தொடங்கத் தவறியதை நீதிமன்றம் கண்டித்தது. தலைமை நீதியரசர் மெர்டூ பெர்னான்டோ தலைமையிலான ஐவர் அமர்வு, 361 பக்கங்கள் கொண்ட […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

  • Jul 25, 2025 - 11:21 AM
  • 0 Comments

கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததனர். அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் சிறப்பு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp