உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு பிரதியமைச்சராக இராணுவ அதிகாரி இருப்பதானது ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்- அருட்தந்தை சிறில் காமினி

  • Jul 29, 2025 - 12:16 PM
  • 0 Comments

பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நம்பகதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ‘ […]

உள்ளூர் செய்திகள்

‘நேற்று – இன்று – நாளை’ எனும் தொனிப்பொருளில் கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு நடைப்பபெற்றது

  • Jul 28, 2025 - 06:00 PM
  • 0 Comments

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக யாழ்ப்பாணத்தில் நேற்று இக்கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பம், சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் […]

உள்ளூர் செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது

  • Jul 28, 2025 - 01:41 PM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்விழாவுக்காக, கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக எடுத்துச்செல்லும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நல்லூர் ஆலய மகோற்சவ கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை, பாரம்பரிய வழக்கின்படி செங்குந்தர் பரம்பரையினரால் வழங்கப்படுகிறது. இதற்கமைய, யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று விசேட பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சிறிய தேர் ஒன்றில் பருத்தித்துறை […]

உள்ளூர் செய்திகள்

தமிழ் கட்சிகளின் கையாலாகாத தன்மையினாலே வடக்கில் ஜேவிபி வென்றதாக ஊடகவியலாளர் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்

  • Jul 28, 2025 - 12:11 PM
  • 0 Comments

தமிழர்கள் புலம்பெயர்வதைக் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் எதுவும் பேசத் தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) நடத்திய வெலிக்கடை சிறை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அவர், வடக்குக் கிழக்கில் தமிழர்கள் தொடர்ந்து குடியீடு செய்யாதிருப்பின், வருங்கால தேர்தல்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார். தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த மண்ணிலேயே வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை […]

உள்ளூர் செய்திகள்

ரணிலின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளையே அநுரவும் தொடர்வதாக நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்

  • Jul 28, 2025 - 11:54 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளையே தற்போதைய அரசாங்கம் பின்பற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்ஸ பொருளாதார மீட்சிக்காக எந்தவிதத் திட்டமும் தற்போதைய அரசாங்கம் கையாளவில்லை என தெரிவித்தார். மாறாக, ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களையே முழுமையாகவே நடைமுறைப்படுத்தி வருவதாகக் கூறினார். கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டுமாயின், முதலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்களும், பல்கலைக்கழக மாணவர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக வளாக காவலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

  • Jul 28, 2025 - 11:44 AM
  • 0 Comments

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 34 வயதுடைய காவலர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையிலே கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்காவுக்கு விருந்துபசாரம் கொடுத்து கௌரவிப்பு

  • Jul 27, 2025 - 07:26 PM
  • 0 Comments

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பரின் விருந்துபசார நிகழ்வு, இன்று அக்கரைப்பற்று பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, கலந்து சிறப்பித்தார் நிகழ்வில் கல்முனை சிவில் மேல்முறையீட்டு உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வி. ராம கமலன், கல்முனை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜே. ட்ரொட்ஸ்கி, மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஏ.எம்.எம். றியாழ், நீதவான் நீதிமன்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் செம்மணி தரைப்பகுதியை ராடர் தொழில்நுட்பம் ஊடாக ஸ்கான் செய்ய திட்டம்.

  • Jul 27, 2025 - 04:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், தரையை ஊடுருவும் ராடர் தொழில்நுட்பத்தின் (GPR) மூலம் பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நவீன ஸ்கானிங் இயந்திரம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, ஆய்வுப் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளன. செய்மதிப் படங்களை அடிப்படையாகக் கொண்டு புதைகுழிக்கு வெளியேயும் புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை, துறைசார் நிபுணர் சோமதேவாவால் உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அகழ்வுப் பணிகளை புதைகுழிக்குள் மட்டுமின்றி பரந்த இடங்களிலும் மேற்கொள்ளவேண்டும் என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கல்விச் சீர்திருத்தமானது ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக அமையும்- பிரதமர் ஹரிணி

  • Jul 27, 2025 - 04:36 PM
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ‘வளமான நாட்டுக்காக பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக’ எனும் தலைப்பில், இரத்தினபுரி நகர மண்டபத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி முறைமை பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இது தமது அரசியல் இயக்கத்தில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட விடயமாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெற்றுள்ளதெனவும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதித்துறை முன்னேறியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்

  • Jul 27, 2025 - 04:09 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, இந்த காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 6,933 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது 2024ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7 சதவீத அதிகரிப்பாகும். மேலும், 2025 மே மாதத்தில் மட்டும் பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,386 மில்லியன் அமெரிக்க […]

0:00
0:00
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp