உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

‘நீதியே என் உரிமை’: பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வடக்கில் 16 நாள் விழிப்புணர்வு பரப்புரை

justice is my right 16 day awareness campaign launched in the north to prevent violence against women | Pathivu News
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் 16 நாள் சர்வதேச விழிப்புணர்வு இயக்க விழிப்புணர்வுச் செயற்பாடு நேற்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இவ்விழிப்புணர்வு நடவடிக்கையில், ‘நீதியே என் உரிமை’ என்ற தொனிப்பொருளிலும், ‘ஒன்றிணைவோம், பாதுகாப்போம், தடுப்போம்’ என்ற மையக்கருத்துடனும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வின்போது, இவ்வியக்கத்தின் விழிப்புணர்வுச் செய்தி மற்றும் பரப்புரை பதாகை என்பன வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டு, அவரது முன்னிலையில் இந்த இயக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25ஆம் திகதி தொடங்கி, சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசெம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் இப் பரப்புரை முன்னெடுக்கப்படவுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான அவசியம் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊