Wednesday, December 25, 2024
Homeஇந்தியாமத்திய பட்ஜெட் :பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

மத்திய பட்ஜெட் :பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

இந்தியாவின் வரவு செலவு திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பாதீடு; அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய பாதீட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
பாதீடு தயாரிப்புக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை  சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின்போது பாதீடு தயாரிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் துணை தலைவர் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பாதீட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>டெல்லியில் காய்கறி சந்தைக்கு சென்று விலைவாசி குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

https://www.youtube.com/@pathivunews/shorts

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments