இந்தியா செய்திகள்

டெல்லியில் காய்கறி சந்தைக்கு சென்று விலைவாசி குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

டெல்லி மரக்கறி சந்தையில் விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்துக் கொண்டார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.

அதன்படி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்தார்.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள கிரி நகர் காய்கறி சந்தைக்கு சென்ற ராகுல் காந்தி விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இது தொடர்பான காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ‘ஒருகாலத்தில் 40 ரூபாயாக இருந்த பூண்டின் விலை தற்போது 400 ரூபாயாக மாறி விட்டது.

அதிகரித்து வரும் பணவீக்கம் சாமானிய மக்களின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்>மஹிந்தவுக்கும், நாமலுக்கும் உயிரச்சுறுத்தல்?

https://www.youtube.com/@pathivunews/shorts

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்