உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நியூ ஈஸ்ரன் ஸ்டார் கிழக்கின் சமர் கிரிக்கட் போட்டிகள்! (மட்டக்களப்பு நிருபர்)

நியூ ஈஸ்ரன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமியின் கிழக்கின் சமர் கிரிக்கட் போட்டிகள் இருதயபுரம் ஈஸ்ரன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம் பெற்றது.

நியூ ஈஸ்ரன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமியின் ஸ்தாபகரும் தலைவருமான பெனடிக் மோசஸ் தலைமையில் இடம் பெற்ற கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

3வது வருடமாக தொடர்ச்சியாக இடம் பெறும் இரு நாட்களைக் கொண்ட இப் போட்டிகளில் 16, 14, மற்றும் 12 வயதிற்குட்பட்ட சிறார்களின் விறுவிறுப்பான போட்டிகள் கண்ணுக்கு விருந்தளித்தது.

திருகோணமலையைச் சேர்ந்த லெஜன்ட்ரீ கிரிக்கெட் அக்கடமி, மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த
நியூ ஈஸ்ரன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமி அணியினருக்கும் இடையிலான பலப்பரீட்சை இடம் பெற்றன.

இந் நிகழ்வில் மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் அபுர் ரிஷான், இலங்கை விமானப்படை பொறியாளர் வி.விஜிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp