முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று(13.05.2026) வடமராட்சி மந்திகை சந்தை பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இடம்பெற்றன.
இதில் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக பொது ஈகை சுடரினை மாவீரர்களின் சகோதரன் ராஜி ஏற்றிவைக்க, மலர் அஞ்சலியினை சோமஸ்கந்த குருக்கள்தனஞ்சய குருக்கள் ஆரம்பித்து வைக்க மக்களால் மெழுகு வர்த்தி ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


