உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் வீசப்பட்ட மனித உடல் பாகங்கள் – குழப்பத்தில் மக்கள்..!

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சௌத்பார் பகுதியில் இறந்த சடலங்களில் இருந்து அகற்றப்படும் மனித எச்சங்களை உரிய வகையில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை காரணமாக பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த பகுதியில் இயங்கி வரும் தனியார் மனித உடல் பதப்படுத்தும் நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்த உடல்களில் இருந்து அகற்றப்பட்ட மனித உடற் பாகங்கள் அந்த பகுதியில் நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டு பல்வேறு இடங்களில் சிதறி கிடந்துள்ளது.
நீண்ட காலமாக இந்த நிறுவனம் மனித எச்சங்களை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளில் அருகிலேயே வீசி வருவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் மன்னார் நகரசபையின் தவிசாளருக்கு பொதுமக்களால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக நகர சபையின் தவிசாளர் துரித நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
அந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1473179017583277

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp