உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு..!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதம பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோரின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சந்தேகநபரை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அரச காணிக்கான அபிவிருத்தித் திட்டமொன்றை அங்கீகரிப்பதற்கு, அதன் உரிமையாளருக்கு சாதகமான முறையில் செயற்பட்டதன் மூலம் ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp