உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்த விஜேசேகர காலமானார்..!

தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02.04.2026) காலை காலமானார்.

காலமான போது அவருக்கு வயது 83 ஆகும்.

மாத்தறை, கொடபிட்டியவில் எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் காயமடைந்து, நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹிந்த விஜேசேகர, முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார்.

2008 ஆம் ஆண்டில் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராகப் பணியாற்றிய அவர், 2001-2004 காலப்பகுதியில் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இறுதியாக ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவான அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் வாழ்க்கையில் பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்