உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உலக சாதனை படைத்த குமுதினி கோபாலகிருஷ்ணன்: அமெரிக்கரின் சாதனையையும் முறியடிப்பு..!

உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் குமுதினி கோபாலகிருஷ்ணன் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய நடுவர் குழாம் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்றிரவு(01.04.2026) நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குமுதினி கோபாலகிருஷ்ணன் இடம் பிடித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் ரிம் அண்ட் சென்னை டஃபி (Tim and Cindy Duffy) நிகழ்த்திய 527 மெழுகுவர்த்தி தாங்கிகள் சேகரிப்பு என்ற சாதனையையும் இதன் மூலம் குமுதினி கோபாலகிருஷ்ணன் முறியடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட குமுதினி கோபாலகிருஷ்ணன், கனடாவில் வசித்து வருகிறார்.

கேண்டில்ஸ் பியூட்டி(Candle Beauty) நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் திகழ்கிறார்.

தனது 30 வருட கால முயற்சியின் பயனாக தாய்நாட்டில் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தமை பெருமைக்குரிய விடயம் என குமுதினி கோபாலகிருஷ்ணன் இதன்போது தெரிவித்துள்ளார்.

காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1602417314415792 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்