உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நிந்தவூர் பிரதேச சபையில் ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு அனுதாப பிரேரணை நிறைவேற்றம்..!

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது சபை அமர்வானது இன்று(26.03.2026) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது தவிசாளரினால் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் நினைவு கூறப்பட்டதுடன் அவர் நிந்தவூர் சபைக்கு ஊடகவியலாளராக இருந்து பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியதாக சுட்டிக்காட்டி அனுதாப பிரேரணை ஒன்றினை சபையில் சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய சபையில் ஏகமனதாக குறித்த பிரேரணை நிறைவேற்றம் செய்யப்பட்டு பின்னர் மறைந்த ஊடகவியலாளருக்கு சபையில் ஒரு நிமிட மௌன பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் தலைமையில் ஏனைய உறுப்பினர்கள் பங்கபற்றலுடன் ஆரம்பமாகின.

இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் தொடர்ச்சியாக ஏனைய விடயங்கள் இடம்பெற்றன.மேலும் மாதாந்த கூட்டம் நடத்த வேண்டிய திகதி தீர்மானித்தல் முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிருபர்
பாறுக் ஷிஹான்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்