உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு..!

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி திரு.மார்க் அன்றி பிரான்சி அவர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இன்று காலை 9.15 – 10.15 வரை இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான பொ.ஜங்கரநேசன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நிருபர்
பூ.லின்ரன்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்