உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அதிகாரபூர்வ அழைப்பு: இந்தியாவின் பிடியில் ஜே.வி.பி குழு

ஜேவிபி கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் இந்தியா சென்ற தூதுக்குழுவில் யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்; கருணைநாதன் இளங்குமரன் இடம் பெற்றுள்ளார்.

இந்த தூதுக்குழுவானது, இந்திய கலாசார உறவுகள் பேரவையின்; (உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நேற்று இந்தியாவின் நியூடெல்லிக்குச் பயணம் மேற்கொண்டது.

இந்த விஜயத்தின் போது, டில்வின் சில்வா மற்றும் அவருடன் இணைந்துள்ள குழுவினர் குஜராத் மற்றும் கேரள மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அத்துடன், அந்த மாநிலங்களின் முதல்வர்களுடன் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன.

அரசியல் தொடர்புடைய சந்திப்புகளுக்கு மேலாக, விவசாயம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பான இந்தியாவின் முக்கிய மையங்களையும் இந்தக் குழு பார்வையிட உள்ளது.

இந்த விஜயத்தில், பொதுச் செயலாளருடன் பல மூத்த கட்சி பிரதிநிதிகள் இணைந்துள்ளனர். அவர்களில், இன்டர்-கம்பெனி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜனக அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் கிட்டணன் செல்வராஜ், ஜேவிபியின் ஊடகப் பிரிவு உறுப்பினர் ஹேமதிலக கமகே, மேலும் கட்சியின் சர்வதேசக் குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுபாஷினி ஆகியோர் அடங்குகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp