உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

லஞ்ச ஊழல் புகார்: அதிரும் சபாநாயகர் செயலகம்

e0aeb2e0ae9ee0af8de0ae9a e0ae8ae0aeb4e0aeb2e0af8d e0aeaae0af81e0ae95e0aebee0aeb0e0af8d e0ae85e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0af8d | Pathivu News

பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட செயலாளர் நாயகமும் தலைமை அதிகாரியுமான சட்டத்தரணி சாமிந்த குலரத்தின இடையே குற்றச்சாட்டுகள் பரிமாறப்படும் நிலையில், நிர்வாக ரீதியான கடுமையான சர்ச்சை நிலவுவதாக தெரியவருகின்றது.

அரசின் வளங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், தனிப்பட்ட விரோதம் காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாமிந்த குலரத்தின சபாநாயகருக்கு எதிராக லஞ்சம், மற்றுமு; ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்ததிலிருந்து 24 மணி நேரத்துக்குப் பின்னர், சபாநாயகர் அலுவலகத்திலிருந்து பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு 15 அம்சங்களை கொண்ட கடிதம் அனுப்பப்பட்டு ‘சான்றளிக்கப்பட்ட தகவல்கள்’ கோரப்பட்டுள்ளன.

இதில் சபாநாயகருக்கான வாகனங்கள், எரிபொருள் ஒதுக்கீடு, ஊடகப் பிரிவுக்கான வாகனப் பயன்பாடு, முந்தைய மற்றும் தற்போதைய பாராளுமன்ற காலங்களில் வழங்கப்பட்ட எரிபொருள் விவரங்கள், ஊடக உபகரணங்கள் மற்றும் பணியாளர் விபரங்கள் உள்ளிட்ட பல நிர்வாகத் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

பொதுச் செயலாளரைப் பற்றிய முன் விசாரணை நடத்திய அதிகாரிக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள், சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான செலவுகள், மின்சாரம்–நீர் கட்டணங்கள், உணவு செலவுகளுக்கான சம்பளக் கழிவுகள் போன்ற விபரங்களும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp