உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கம்பஹாவின் பல பகுதிகளில் நீர்வெட்டு..!

அத்தனகல்ல கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (16.06.2026) முற்பகல் 8.00 மணி முதல் நாளை (17.06.2026) அதிகாலை 3.00 மணி வரை 19 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இதன்படி, கம்பஹா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி, கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி, மஹர பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி, வெலிவேரிய, பெலும்மஹர, ரதுபஸ்வல, மினுவாங்கொடை, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

மேலும், ரன்பொகுணுகம வீட்டுத் திட்டம், ஊராபொல, அத்தனகல்ல, படலீய, வத்துபிட்டிவல, நிட்டம்புவ, வேயங்கொடை, கலகெடிஹேன, திஹாரிய, நைவல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp