18 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் இரண்டு தமிழ் பெண்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளை விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், அளுத்வத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் மற்றும் ஹப்புத்தளை, தொடருந்து நிலைய வீதியில் வசித்து வந்த மற்றுமொரு ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் ஆவார்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் 2008 ஜனவரி 13 அன்று கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் அவர்கள், நிலத்தடி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகத்திற்குரிய அதிகாரிகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளைத் தொடர்ந்து, அவர்களைத் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.
What’s your Reaction?

