உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில்.குழாய்க் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை ஒழுங்குமுறைபடுத்த நடவடிக்கை..!

jaffna measures to regulate tube well construction | Pathivu News
யாழ்ப்பாண மாவட்டத்தில்,குழாய்க் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை முறையான ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற ஆரம்பக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
குடாநாட்டில் கண்காணிப்புக்கு உட்படாத வகையில் குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்வளத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இதனை முறையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, நீர்வளச் சபையின் வடபிராந்திய முகாமையாளர், குழாய்க் கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
அதன்படி, குழாய்க் கிணறு அமைப்பதற்கு நீர்வளச் சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், நீர்வளச் சபையில் பதிவு செய்யப்பட்டவர்களே குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கான இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.
எனினும், தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் சில விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாகக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனடிப்படையில், தேவையான திருத்தங்களை உள்ளடக்கிய புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு சுற்றாடல் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மேலும், முறையான அனுமதியின்றி அல்லது உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுவது தொடர்பில் பொதுமக்களால் நீர்வளச் சபைக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை, குழாய்க் கிணறு அமைத்தல் ஒரு வணிக நடவடிக்கையாகக் கருதப்படுவதால், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து உரிய வணிக அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளார்களா என்பதையும், நீர்வளச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய முக்கிய இயற்கை வளமாகக் காணப்படும் நிலையில், அதன் பயன்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் – தலைமைப்பீடம், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பிரதிநிதி, நீர்வளச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊