முக்கிய செய்திகள்

பாராளுமன்றத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாடுவதால் இனங்கள் ஐக்கியப்படும்- சபாநாயகர்

  • Jan 25, 2025 - 04:31 AM
  • 0 Comments

தைப்பொங்கல் பண்டிகை இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது. இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழரசுக் கட்சி, ஜேவிபி இன் பராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் முன்மொழிவுக்கு அமைய, சபாநாயகரின் ஆலோசனையின் கீழ், புத்த சாசன, சமய […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

  • Jan 24, 2025 - 04:50 PM
  • 0 Comments

மாணவர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள மாணவர்கள் அதனை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடக்கம் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டததை ஆரம்பித்துள்ளனர் 4 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய் விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய் ⁠மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து […]

முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்

  • Jan 24, 2025 - 11:27 AM
  • 0 Comments

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த தீபாவளி தினத்தன்று மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வரும் நிலையில் கொலை செய்யப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலை […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு பொலிஸ் ஆணைக்குழு நேற்று வகுப்பெடுத்தது

  • Jan 23, 2025 - 09:00 AM
  • 0 Comments

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸாரின் சில இடமாற்றங்களைச் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கம் கொடுத்துள்ளது […]

உலகம்

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ – 31 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றம்

  • Jan 23, 2025 - 08:10 AM
  • 0 Comments

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாக பரவிய காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் சுடர்விட்டு எரிந்தது பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை […]

செய்திகள்

பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை-ஜனாதிபதி

  • Jan 22, 2025 - 09:28 AM
  • 0 Comments

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றுகின்றவர்களின் இடமாற்றங்களை ஒழுங்கு கிரமமாக செய்வதற்கே பொலிஸ் ஆணைக்குழு உள்ளது. ஆனால் பொலிஸ் ஆணைக்குழுவும் இழுத்தடிப்பு செய்கிறது. பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே சில இடமாற்றங்களை கோருகின்றோம் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆனால் ஆணைக்குழு அதனை சரியாக செய்யவில்லையென தெரிவித்துள்ளது இந்த நாட்டை போதைப்பொருள் மற்றும் பாதாளா உலகக்குழுக்களிடமிருந்து கட்டம் கட்டமாக மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளார் ;அதேபோன்று திருடர்களை பிடிக்கவில்லையா என சிலர் எம்மிடம் வினவுகின்றனர்? அவர்களை சிறையில் அடைக்க முடியாத எனக் […]

சினிமா

இயக்குனர் மிஸ்கின் அருவருக்கதக்கதாக மேடையில் பேசியதால் குமுறும் நெட்டிசன்கள்

  • Jan 21, 2025 - 08:41 AM
  • 0 Comments

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘பாட்டல் ராதா.’ பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூபேஸ் ராஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஸான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. […]

உலகம் வினோத உலகம்

சீனாவின் இளையோர் AI செல்லப் பிராணிகளையே அதிகம் விரும்புகின்றார்கள்

  • Jan 21, 2025 - 07:44 AM
  • 0 Comments

செல்லப் பிராணிகளின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோட்களை வாங்கும் ஆர்வம் சீன இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. வழக்கமாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளைவிட அவற்றைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திர செல்லப் பிராணிகளை தங்களுடன் வைத்துக்கொள்ள இளம் பருவத்தினர் அமிகம் ஆரவம் காட்டுகின்றனர் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகளிடம் காணப்படும் குணாதிசயங்களை இந்த ரோபோட்கள் வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் அவற்றை வடிவமைத்திருப்பது இவற்றின் சிறப்பம்சம். மன அழுத்தங்களிலிருந்து விடுபட […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன

  • Jan 20, 2025 - 03:06 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் – வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் […]

செய்திகள்

தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

  • Jan 20, 2025 - 02:50 PM
  • 0 Comments

தொடரூந்து சாரதிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தர பதவி உயர்வு பரீட்சை காரணமாக மூன்று நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமை போன்று இயங்கும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் பரீட்சைக்கு தயார்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வரை பல தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. எவ்வாறாயினும், நேற்றைய தினம் பிற்பகல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவில்லை என தொடரூந்து திணைக்களம் மேலும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp