சினிமா

இயக்குனர் மிஸ்கின் அருவருக்கதக்கதாக மேடையில் பேசியதால் குமுறும் நெட்டிசன்கள்

e0ae87e0aeafe0ae95e0af8de0ae95e0af81e0aea9e0aeb0e0af8d e0aeaee0aebfe0aeb8e0af8de0ae95e0aebfe0aea9e0af8d e0ae85e0aeb0e0af81e0aeb5e0aeb0 | Pathivu News

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘பாட்டல் ராதா.’ பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரூபேஸ் ராஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஸான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஸ்கின் பேசியது மிகவும் சர்ச்சையாக தற்பொழுது மாறியுள்ளது.

மிஸ்கின் அதில் ‘ குடி ஒரு மனிதனுக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஒரு விஷயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அவனுக்கு உதவுகிறது.

ஒரு நபர் குடிக்கு அடிமையானால் அதில் நம் பங்கும் அடங்கி இருக்கிறது.
இந்த சமுதாய பங்கும் அதில் முக்கிய பங்கு வகுக்கிறது.

இப்படி நல்ல கருத்துகளை பேசிய மிஸ்கின். அவ்வப்போது மேடையில் அநாகரீகமாக காது கூசும் அவ சொற்களை பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார்.

இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான் பாரு. இங்க மனிதர்கள அதிகமா குடிகாரனா ஆக்குனது இளையராஜா தான்’. என உரிமையாக ஒருமையில் பேசினார்.

மனிதர்கள் எப்பொழுதும் ஒரு தராசை வைத்து மற்ற மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருக்கோம் என கூறும் போது பல காது கூசும் வார்த்தைகளை பயன்படுத்தினார்.

இவர் பேசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு பெரிய மதிப்புள்ள இயக்குனர் மேடையில் இவ்வாறு பேசுவது தவறானது என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதனை இவர் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தாரா? என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுகிறது.

 

 

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊