உகந்தமலை முருகனாலயத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற பாலஸ்தாபனம்!
கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா உகந்தமலைமுருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இறுதியாக இவ் ஆலயத்தில் 2014 இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. எனவே ஆகம விதிப்படி 12 வருடங்களின் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற விதி முறைகளுக்கமைய கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 முதல் 12.00 வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் பாலஸ்தாபன குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது. […]









