palitha bandara wins discus silver | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் வௌ்ளிப் பதக்கத்தை கைப்பற்றிய பாலித்த பண்டார..!

  • Jul 30, 2026 - 09:38 AM
  • 0 Comments

கிளாஸ்கோவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்த பண்டார, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச அரங்கில் சிறப்பானதொரு திறமையை வெளிப்படுத்தியுள்ளதுடன் இது அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாகவும் அமைந்துள்ளது.

sri lanka weather today 20 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Jul 30, 2026 - 09:34 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், […]

ymma 57th national president honour | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அகில இலங்கை YMMA பேரவையின் 57வது தேசிய தலைவர் சியாதுக்கான கௌரவம் வழங்கும் நிகழ்வு..!

  • Jul 29, 2026 - 01:04 PM
  • 0 Comments

அகில இலங்கை YMMA பேரவையின் 57வது தேசிய தலைவராக பதவியேற்ற தனது முன்னாள் மாணவரான ஜனாப் முஹம்மத் ரியால் முஹம்மத் ஸியாத் அவர்களை கௌரவிக்கும் மாபெரும் பாராட்டு விழா, க/வ/ அல் சபா மகா வித்தியாலயம், வத்தேகெதர, பொல்கொல்ல, கண்டியில் சிறப்பாக நடைபெற்றது. ஜனாப் ஸியாத் அவர்களின் இல்லத்திலிருந்து பாடசாலை வளாகம் வரை ஊர்வலத்துடன் விழா ஆரம்பமானது. பாடசாலை இசைக்குழு முழங்க, குடும்பத்தினர், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த ஊர்வலத்தில் […]

14000 sea cucumbers seized | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

14,000 க்கும் மேற்பட்ட கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது..!

  • Jul 29, 2026 - 01:00 PM
  • 0 Comments

இலங்கை கடற்படையினரால் மன்னார் சவுத் பார் கடற்கரை மற்றும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதியில் 28.07.2026 அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியே நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட மற்றும் முறையான அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாக கொண்டு செல்லப்பட்ட சுமார் பதினான்காயிரத்து எழுபத்திரண்டு (14,072) கடல் அட்டைகள் அடங்கிய கையிருப்புடன் 12 சந்தேகநபர்கள், 03 டிங்கி படகுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் சட்டத்தின் முன் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வடமத்திய […]

deevaga fishermen protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தீவக மீனவ சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்..!

  • Jul 29, 2026 - 12:31 PM
  • 0 Comments

எல்லை மீறிய இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து இன்றைய தினம் குறித்த போராட்டம் இடம்பெற்றது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1786076089478309

mavittapuram kandaswamy manjam festival | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஞ்சத்திருவிழா..!

  • Jul 29, 2026 - 12:04 PM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா நேற்று(28.07.2026) நடைபெற்றது. எதிர்வரும் 11ஆம் திகதி தேர்த் திருவிழாவும், மறுநாள் ஆடி அமாவாசை தினமான 12ஆம் திகதி கீரிமலை புனித கடற்கரையில் தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

jaffna youth dies drug addiction | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு..!

  • Jul 29, 2026 - 11:58 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த இளைஞன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத நிலையில் , வீட்டார் சென்று பார்த்த போது மலசல கூடத்திற்குள் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அதனை அடுத்து , அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் […]

family dispute death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குடும்பத்தகராறால் பிரிந்த உயிர்..!

  • Jul 29, 2026 - 11:36 AM
  • 0 Comments

கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (28.07.2026) இரவு இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பில் கம்பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். பின்னர் காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார். உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் […]

thiruppalugamam draupadi amman event | Pathivu News முக்கிய செய்திகள் உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை

திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வனவாசம் மற்றும் வாள்மாற்று நிகழ்வு..!

  • Jul 29, 2026 - 11:33 AM
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீப்பள்ளயச் சடங்கு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. ​மகாபாரதக் காவிய நாயகியும், அக்னியில் அவதரித்த பாஞ்சாலி தாயின் அருளாசி வேண்டி ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும் இச்சடங்கு உற்சவம், கடந்த வெள்ளிக்கிழமை (24.07.2026) ஆம் திகதி இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. ​இதன் தொடர்ச்சியாக, இன்று புதன்கிழமை (29.07.2026)காலை ஆலயத்தில் விசேட […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊