workshop on local government activities held in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் செயலமர்வு..!

  • Aug 19, 2026 - 11:05 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் வருமான மூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இச் செயலமர்வில், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யு. ஜெலீபன், கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் க. கம்சநாதன் மற்றும் காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் சுதர்சன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர். இதன்போது […]

conference on august 30 urges international investigation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆவணி 30இல் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மாநாடு..!

  • Aug 19, 2026 - 11:02 AM
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளதுடன் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு செய்யப்படவுள்ளது. அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆவணி 30ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் “நீதிக்கான நீள்பயணம்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் அன்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் […]

rs 3 9 billion allocated for jaffna district development | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட அபிவிருத்திக்கு 3900 மில்லியன் ரூபா நிதி..!

  • Aug 19, 2026 - 10:39 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 3,900 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அதில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு , பிரதேச சபைகள் மற்றும் மத்திய, மாகாண அமைச்சுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியமானது என யாழ்.மாவட்ட செயலர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் […]

chess workshop in jaffna led by grandmaster akash ganeshan | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இந்தியா “கிராண்ட் மாஸ்ரர்” ஆகாஷ் கணேசன் தலமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு..!

  • Aug 19, 2026 - 09:52 AM
  • 0 Comments

இந்தியாவின் சதுரங்க, தேசிய சாம்பியனான “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் சதுரங்க பயிலரங்கு நடைபெற்றது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகமும் , யாழ்ப்பாண மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 05 நாள் பயிலரங்கு யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த 14ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையிலான 5 நாட்கள் நடைபெற்ற பயிலரங்கின் இறுதி நாள் நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டிருந்தார்.

arrested for spreading false information about ltte training camp | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் குறித்து பொய்த் தகவல் பரப்பிய நபர் கைது..!

  • Aug 19, 2026 - 09:49 AM
  • 0 Comments

சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18.08.2026) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களைப் பரப்பியமை […]

sri lanka weather today 24 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Aug 19, 2026 - 09:47 AM
  • 0 Comments

19.08.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

former minister keheliya arrested again | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது..!

  • Aug 18, 2026 - 03:50 PM
  • 0 Comments

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

pillayan remanded in custody again | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்..!

  • Aug 18, 2026 - 03:47 PM
  • 0 Comments

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதில் நீதவான் முன்னிலையில் இன்று (18.08.2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் காணொளி வழியே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் […]

jaffna a l student dies after sudden illness during exam period | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணம்..!

  • Aug 18, 2026 - 03:45 PM
  • 0 Comments

நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , கந்தர்மடம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) எனும் மாணவனே திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார் குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும் போது, பரீட்சை மண்டபத்தில் மயக்கமடைந்த நிலையில் […]

protesters in palaly disrupt traffic demand land release | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலியில் போராடியவர்களால் போக்கு வரத்திற்கு இடையூறாம்..!

  • Aug 18, 2026 - 09:49 AM
  • 0 Comments

வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார். பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்ரன் சுதாகர், வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தன் , ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கணேசப்பிள்ளை வேந்தன் மற்றும் எம். குணசேகரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊