special meeting with local council members | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல்..!

  • Jul 17, 2026 - 09:44 AM
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ நேற்றைய தினம் நடைபெற்றது. ​இந்தக் கலந்துரையாடலின் போது வட்டார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், தற்போதைய அபிவிருத்திப் பணிகளின் அடைவு மட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.” ​அத்துடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. ​இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற […]

athurugiriya major accident traffic disrupted | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அத்துருகிரியவில் கோர விபத்து; போக்குவரத்துக்கும் பாதிப்பு..!

  • Jul 17, 2026 - 09:38 AM
  • 0 Comments

அத்துருகிரிய பகுதியில் பஸ் ஒன்றும் டிப்பர் ஒன்றும் மோதி இன்று (17.07.2026) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக கோவின்ன வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

us tightens visa restrictions | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விசா கட்டுப்பாடுகளை இறுக்கியது அமெரிக்கா..!

  • Jul 17, 2026 - 09:35 AM
  • 0 Comments

அமெரிக்கா தமது விசா கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டு மாணவர்கள், கலாசார பரிமாற்ற விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான விசாக்களின் கால எல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் நேற்று (16.07.2026) நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த புதிய விதியானது, சர்வதேச மாணவர்களுக்கான ‘F’ விசாக்கள், கலாசார பரிமாற்றத் திட்டங்களில் வருகை தருவோர் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் ‘J’ விசாக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ‘I’ விசாக்கள் ஆகியவற்றிற்கு ஒரு நிலையான காலப்பகுதியை […]

navagamuwa shooting victim dies | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சாவடைந்தார்..!

  • Jul 17, 2026 - 09:32 AM
  • 0 Comments

நவகமுவ பொலிஸ் பிரிவின் வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16.07.2026) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 26 வயதுடைய நபரே இவ்வாறு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைத்துப்பாக்கி ஒன்றினை பயன்படுத்தியே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், அவர்களைக் கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸார் விசேட விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.

strong winds expected parts of sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் சாத்தியம்..!

  • Jul 17, 2026 - 09:29 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. வட, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதேவேளை காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்று மணிக்கு சுமார் […]

arjuna mp development meeting issue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்பியினால் அமைதியின்மை..!

  • Jul 16, 2026 - 01:48 PM
  • 0 Comments

அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்பியினால் அமைதியின்மை காரணமாக அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேறியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை(16.07.2026) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க […]

yoshitha case date set | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யோஷிதவின் வழக்கு திகதியிடப்பட்டது..!

  • Jul 16, 2026 - 01:43 PM
  • 0 Comments

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா நீதிமன்றத்தில் […]

six parties unite opposition split | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் பிளவடைவதற்கான அறிகுறியா? 6 கட்சிகளின் ஒன்றிணைவு..!

  • Jul 16, 2026 - 01:40 PM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் கூட்டணியில் செயற்பட்டு வந்த 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொதுவானதொரு மேடையின் ஊடாக தங்களது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்க தீர்மானித்துள்ளமையானது, எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில், வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலொன்றில் பிரதான எதிர்க்கட்சி மேலும் பிளவடைவதற்கே இது வழிவகுக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. மாகாண சபைத் தேர்தலை எவ்வித தாமதமுமின்றி நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் […]

trincomalee kemba arrest drugs weapons seized | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை ‘கெம்பா’ கைது; வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களும் மீட்பு..!

  • Jul 16, 2026 - 01:36 PM
  • 0 Comments

திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ என்பவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர். உப்புவெளி மின்சார நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான ‘கெம்பா’விடமிருந்து 16 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் இரண்டு கூர்மையான வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேக […]

prime minister returns qatar | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டாரில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர்..!

  • Jul 16, 2026 - 11:25 AM
  • 0 Comments

கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (16) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார். கட்டாரின் தோஹாவில் அமைந்துள்ள லுஸைல் (Lusail) அரண்மனைக்குச் சென்ற பிரதமர், அந்நாட்டின் தற்போதைய அமீரான ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியைச் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தைப் பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊