இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது வட்டார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், தற்போதைய அபிவிருத்திப் பணிகளின் அடைவு மட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.”
அத்துடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், உப தவிசாளர் புஸ்பநாதன் சிவகுமார் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?

