துப்பாக்கி சூடு நடத்தியாவது தமிழக மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துங்கள்..!
எல்லைதாண்டி வரும் தமிழக கடற்தொழிலாளர்களை துப்பாக்கி சூடு நடாத்தியாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் மகேஷ் கடற்படையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தீவகப் பகுதிகளில் அண்மைக்காலங்களாக இந்திய இழுவைமடிப் படகுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அதனால் எமது கடற்தொழிலாளர்களின் பெருந்தொகையான வலைகள், உடைமைகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாங்களும் எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ மகஜர்கள் கையளித்தும் , […]









