pandiruppu mullivaikkal kanji | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்..!

  • May 18, 2026 - 12:36 PM
  • 0 Comments

தமிழர்களின் வலி நிறைந்த மே மாத நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18.05.2026) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் […]

eelam tamils justice call | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

17 வருடங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களுக்கு நீதிக்கிடைக்கவில்லை..! நிழல்கள் ரவி

  • May 18, 2026 - 12:21 PM
  • 0 Comments

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையின அரசின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மையின மக்களான தமிழ் மக்கள், 30 ஆண்டுகளாக உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினர். கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் அந்த யுத்தமானது […]

kurumankadu pillaiyar prayer | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனை..!

  • May 18, 2026 - 11:39 AM
  • 0 Comments

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்றைய தினம்(18.05.2026) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இதில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

nandikadal tribute | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி..!

  • May 18, 2026 - 11:28 AM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார். […]

jaffna swimming pool death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..!

  • May 18, 2026 - 11:21 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(17.05.2026) ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான் புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 13) என்ற சிறுவன் நீரில் ழூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள ரேவடி நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்டிருந்த வேளையே , எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

vandarumoolai mullivaikkal remembrance | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டு வந்தாறுமூலையில் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

  • May 18, 2026 - 10:23 AM
  • 0 Comments

2009 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(18.05.2026) மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடிச்சந்தியில் வந்தாறுமூலை இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன் போது பொதுச்சுடர், விளக்குகள் ஏற்றப்பட்டும் அகவணக்கம் செலுத்தியும் இறுதியுத்தத்தில் உயிரிழந்தவர்கள் உணர்வுபூர்வமாக மலர்தூவி நினைவுகூரப்பட்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், நீர்முகபிள்ளையார் ஆலய பிரதமகுரு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் […]

archchuna arrest claim | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் கைது செய்யப்படுவாரா ராமநாதன் அர்ச்சுனா..! அதிர்ச்சி குற்றச்சாட்டு

  • May 18, 2026 - 09:34 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இலங்கையில் தாம் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துகள் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வந்திறங்கும் போது தாம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ளார். இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரை குறித்து பேசுவது தேசத்துரோகமாக கருதப்படக்கூடும் என்பதால், தமது கருத்துகள் காரணமாக தமது குரல் நிரந்தரமாக […]

oil price increase | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக சந்தையில் உயரும் எண்ணெய் விலை..!

  • May 18, 2026 - 09:17 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18.05.2026) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 111.7 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 108.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற நிலை மற்றும் ஐக்கிய […]

sl weather today 15 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 18, 2026 - 09:09 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18.05.2026) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அநுராதபுர […]

vellaveli mullivaikkal event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு…

  • May 15, 2026 - 05:14 PM
  • 0 Comments

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலிலே படுகொலைக்குள்ளான உறவுகளை நினைவுகூரும் முகமாக போரதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசபைப் பிரதித் தவிசாளர் கயசீலன் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் போரதீவுப் பற்றுப் பிரதேச நிருவாகிகள், உறுப்பினர்கள் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp