உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு..!

  • Mar 25, 2026 - 11:54 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் புதன்கிழமை(25.03.2026) பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். காணொளி இணணப்பு: https://www.facebook.com/share/v/17Ma9fs2j5/

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கு நடவடிக்கை..!

  • Mar 25, 2026 - 11:38 AM
  • 0 Comments

சட்டச் சிக்கல்களை நீக்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (24.03.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் குறித்த சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஒப்பந்த காறரின் பொறுப்பற்ற செயலால் யாழில் 570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்..!

  • Mar 25, 2026 - 11:31 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராசா தலைமையில் நடைபெற்றது. அதன் போதே பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்முகம் ஆற்றுகைக் குழுவின் நாடக விழா..!

  • Mar 25, 2026 - 11:25 AM
  • 0 Comments

அனைவரும் வாரீர் உலக நாடக தினத்தை முன்னிட்டு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ஏற்பாட்டில் 26.03.2026 வியாழக்கிழமை மற்றும் 27.03.2026 வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை அரங்கத்தில் நாடக அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் வியாழக்கிழமை பிற்பகல் 4மணிக்கு சிறுவர்களுக்கான அரங்க வெளி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து 5மணிக்கு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் எங்கே எங்கே குடை எங்கே?, பூமணி ஆகிய நாடக ஆற்றுகை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 27.03.2026 வெள்ளிக்கிழமை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்..!

  • Mar 25, 2026 - 11:21 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். நாட்டில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்ட தினமாக நேற்று முன் தினம் பதிவதானது. நேந்றைய மின்சாரத் தேவையானது 3,089 மெகாவோட் ஆகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மின்சாரத் தேவையானது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

  • Mar 25, 2026 - 11:18 AM
  • 0 Comments

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று (24.03.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பதற்றங்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டார். அத்துடன் 2026 யால பருவத்தில் சுமார் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் நம்பிக்கையுடன் ஈடுபடுங்கள்..! ஈரானை வலியுறுத்திய மக்ரோன்

  • Mar 25, 2026 - 11:15 AM
  • 0 Comments

நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுமாறு ஈரானை வலியுறுத்தினார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன். ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசியபோதே மக்ரோன் இதனைத் தெரிவித்தார். பதற்றத்தைத் தணிப்பதற்கு வழிவகுக்கவும், ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தை சீர்குலைக்கும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கட்டமைப்பை வழங்கவும், ஈரான் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று நான் அழைப்பு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணெய்..!

  • Mar 25, 2026 - 11:11 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், இது 4.42 சதவீத வீழ்ச்சி எனவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.84 டொலர்கள் வரை குறைந்துள்ளதுடன், இது 5.41 சதவீத வீழ்ச்சியாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மெர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 119.88 […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் கோரிக்கை..!

  • Mar 25, 2026 - 11:08 AM
  • 0 Comments

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இதனைத் தெரிவித்தார். முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தற்போதைை நாணய கொள்கையில் மாற்றமில்லை..!

  • Mar 25, 2026 - 11:04 AM
  • 0 Comments

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (24.03.2026) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) தற்போதைய மட்டமான 7.75% என்ற அளவில் மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp