சீனர்கள் 3 கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!
சைபர் குற்றங்களை (இணையவழி குற்றங்கள்) புரிவதற்காக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 5,140,000 ரூபாய் பெறுமதியான கைபேசிகள் மற்றும் அவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் சுங்கத்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. குறித்த கைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து, பசுமை வழித்தடம் ஊடாக வெளியேற்ற முயன்ற போதே இந்த மூன்று சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது […]









